குமுதம் இதழில் ஓ பக்கங்களில் பேரா.சுப.வீ குறித்து அவதூறுகளை அள்ளி வீசிய ஞாநி தொடர்ந்த நம் எதிர்ப்புகளால் இப்போது பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்..திடீரென்று இந்த வாரம் மருத்துவர் ராமதாஸை ஆதரித்துள்ளார்…ஜெயலலிதா ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம் இம்மியளவும் நகர்த்தப் பட வில்லை என்று சாமரம் வீசிய கைகள் இன்று சாமர்த்தியம் பேசுகின்றன…மாலடிமை ..என்றும் தமிழ் கலாச்சார காவலர்
என்றும் மருத்துவர் அய்யாவை தூற்றியவர் பாய்ந்து வரும் எதிர்ப்புகளால் இன்று பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்…

ஞாநி…அவர்களே…
கருத்துச் சுதந்திரத்தின் நவீன காவலரே….தங்கள் ஆர்குட் குழுமத்தில் இருந்து மாற்றுக் கருத்துக்கள் வைத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை தடை செய்துள்ளீர்கள்…என் கருத்துகளும் ….என் அண்ணன் அறிவுமதியின் கடிதம் அடங்கிய கட்டுரையை …தங்களை அம்பலப் படுத்தி விடும் என்ற அச்சத்தால் அவசர..அவசரமாக ..முன் அறிவிப்பின்றி…அகற்றி உள்ளீர்கள்..இது தான் தங்களின் கருத்து காவலின் கதை….விவாதத்தில் பங்கெடுக்க முடியாத தாங்கள்…..எங்கு பதில் சொன்னால் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சியை உருவி விடுவார்கள் என்று அஞ்சும் நீங்கள்… உண்மைத் தமிழனாய்….உணர்வின் வீரனாய் பொங்கி எழுந்து ….ஆவேசமாய்…..உங்கள் ஆணி வேரை ஆட்டி பார்த்த …சத்யராஜ் அவர்களுக்கு குட்டு வைக்கிறீர்கள்…..சத்யராஜ் சங்கர மடத்து பெருமைகளை பாடி இருந்தால் பூச்செண்டு கொடுத்து இருப்பீர்கள்..

…ஒரு மனிதனை குட்டுவேன் என்று எழுதுவது வன்முறை இல்லையா….
எந்த தகுதி உங்களுக்கு குட்டும் அதிகாரத்தை வழங்கியது என தெரிந்து கொள்ளலாமா….ஞாநி…..தலையில் தோன்றிய தகுதியா…?

ஞாநி அவர்களே….

தங்களை அம்பலப்படுத்துவதை நான் இந்த தமிழுலகிற்கு செய்யும் பெரிய சேவையாக கருதுகிறேன்…தாங்கள் மிகவும் ஆபத்தானவர்….தமிழகத்தின் மிகப் பெரிய இதழியல் ஊடகங்களான ஆனந்த விகடனிலும்,அதற்கு பிறகு குமுதத்திலும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டு நிலைகள் மீதும்,திராவிட இயக்க ஆளுமைகள் மீதும் கருத்துத் தாக்குதலை தொடர்ந்துள்ளீர்கள்..இந்த தாக்குதல் சிங்கள பேரினவாத அரசு எம் ஈழ உறவுகளின் மீது தொடுத்திருக்கும் வன் தாக்குதலுக்கு இணையானது…சிங்கள இராணுவத்தின் தாக்குதலாவது இந்த தலைமுறையோடு நின்று விடும்…எம் தொப்புள் கொடி உறவுகளின் அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது…ஆனால் தாங்கள் ஊடகங்களில் பரப்பி வரும் தமிழ் உணர்வாளர்கள் ,மற்றும் திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களின் மெய் நிலைகளை திரிக்கும் கருத்து திணிப்புகள் ஒட்டுமொத்தமாக தடுக்கப் படவேண்டிய ஒன்றாக நான் கருதுகிறேன்….

இத்தனை ஆண்டு காலம் உங்களது முன்னோர்கள் எங்களது பண்பாட்டு வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதினார்கள்..பார்ப்பனர்கள் அடுத்தவரை ஏய்த்து..அரசனை கருத்தால் மாய்த்து…,மாய்மாலம் செய்து உச்சாணிக் கொம்பில் கொழுத்து இருந்து..சதுர்வேதி மங்கலங்களை,பட்டவர்த்திகளை பெற்ற காலங்களை பொற்காலம் என்றும்…சாதி வேறுபாடுகளை தகர்த்து,, பார்ப்பனர்களுக்கான சலுகைகள் மறுக்கப் பட்ட காலங்களை இருண்டகாலங்கள் என்று தமிழ் வரலாற்றை தங்களுக்கான வரலாறாக எழுதிய அதே உத்தியைத் தான் இன்று தாங்களும் எழுதுகிறீர்கள்…..

தாங்கள் எழுதியுள்ள தவறான…உண்மைக்கு திரிபான கருத்துக்களை எதிர்கால தமிழகம் அப்படியே வடிக்கட்டலின்றி வரலாறாக கவனித்து விடும் என்பதற்காகவே தாங்கள் கருத்துகள் மீது இவ்விதமான தொடர் மாற்றுக் கருத்துக்களை வைத்து வருகிறேன்…
தங்களை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கிறேன்…..நீங்கள் புழங்கும் உங்கள் தளத்திலேயே வந்து எழுதுகிறேன்….உண்மை இருப்பின்…உங்கள் கருத்தில் தெளிவு இருப்பின் …உங்களது ஆரவாரமான சேனைகளோடு வந்து விவாதிக்க வேண்டியது தானே..?

அதை விடுத்து…..என் கட்டுரையை அழிக்கிறீர்கள்…என்னை தடை செய்கிறீர்கள்….
இது கருத்து சர்வாதிகாரம் இல்லையா…தங்கள் கருத்துக்களை அப்படியே தமிழன் தயங்காமல் முழுங்கி விட வேண்டுமா என்ன……

சென்ற முறை தந்தை பெரியாரை தாங்கள் இழிவுப் படுத்தியது குறித்து தாங்கள் என்னோடு நடத்திய விவாதத்தில் உங்கள் ஆர்குட் குழுமத்தையே அழிக்க வேண்டும் என உத்திர விட வில்லையா….?

தங்களது கருத்துகளை வெளியிடும் குமுதமும் அடுத்த வாரம் தங்கள் அவதூறு கருத்துகளை எதிர்த்து பேரா.சுப.வீ அவர்களின் பதிலையும்..அவரின் பதிலுக்கான உங்களது எதிர்வினையையும் ஒரே இதழில் வெளியிட துணிந்திருப்பதும் தங்களை காப்பாற்றும் செயலாகவே நான் பார்க்க வேண்டியுள்ளது…குமுதம் போன்ற மக்கள் அதிகமாக படிக்கக்கூடிய இதழ் ..இப்படிப்பட்ட அவதூறுகளை வெளியிடுவது தவறு…இந்த போக்கு எதிர்காலத்தில் பிழையான வடுவாக எஞ்சி இருக்காதா…?

இத்தனை ஆண்டு காலம் தமிழ் அறிவுலகில் இயங்கி வந்துள்ளீர்கள்…தங்களை எத்தனையோ மேடைகளில் …ஊடகங்களில் நிறுத்தி வைத்து…..கைத் தட்டிய தமிழர்கள் மீது கொஞ்சமும் நன்றி இல்லாமல் தொடர்ந்து தவறாகவே எழுதி வருகிறீர்கள்…

விவாதத்திற்கு வாருங்கள் ஞாநி..அதை உலகத் தமிழர்கள் சார்பில் நான் வரவேற்கிறேன்…உங்களது அனைத்து பதிலுக்கு பதில்களுக்கும் எங்களிடம் தலைமுறை கடந்த கேள்விகள் இருக்கின்றன..அதனை விடுத்து பதில் சொல்லாமல் சாதூர்ய சந்தில் பதுங்காதீர்கள்….

இந்த சின்னத் தூறலுக்கே…
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒண்டுகிறீர்களே…….
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்…
அடேய்..
எந்தக் குடையில்…

-பாவலர். அறிவுமதி..