என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு….

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி…

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது…..

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை…

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்….துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்…ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது…

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்…

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது…

ஒரு மழை பொழியும் நாளில்….
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்……

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்…

மிகுந்த மகிழ்ச்சியோடு….
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்