மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்

அரசியல்
கடந்த சில நாட்களாக முகநூல் பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எம்மை கடுமையாக தாக்கிக் கொண்டிருப்பதும்…வசவாளர்களாக மாறி ஏசி,பேசிக் கொண்டிருப்பதும் தொடர்கின்றன…

மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தங்களுக்கான அரசியல் வெளியை அமைக்க முயல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல்.. தமிழ்த்தேசிய இனம் என்ற சொல்லைக் கூட அரசியல் அரங்கில் பயன்படுத்தாமல் திட்டமிட்டு புறக்கணித்து ..கடந்த 2009 -ல் எமது தாய்நிலம் ஈழம் அழிக்கப்பட்டப் போது திட்டமிட்டு நீளத்துடித்த எம் கரங்களை அரசியல் அதிகாரத்தால் கட்டி, ஏய்க்கின்ற நாடகக் காட்சிகளால் தொடர்ந்து எம்மை ஏமாற்றி.. தொப்புள் கொடி உறவுகள் அங்கே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட போது ..மரபணு துடித்து ..உணர்வுகள் வெடித்து..உயிரோடு எரிந்து ..உலகத்திற்கே சாட்சிகளாக முத்துக்குமார் போன்ற தியாக மறவர்கள் திகழ்ந்த போது…தனது பிழைப்புவாத அரசியலுக்காக..ஊழல் பெருநாற்றம் எடுத்து நாறுகிற தனது பதவிக்காக எம் இனம் அழிய துணைப் போன இவர்கள்..

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் தேசிய இனவரலாற்றில் தோன்றிய மகத்தான தலைவர்.பிரபாகரன் அவர்களைப் பற்றி இப்போது பேச அழைக்கிறார்கள்..விவாதிக்க விரும்புகிறார்கள்..வெங்காயம்…

காலங்காலமாய் அடிமைப்பட்டு , அடக்கப்பட்டு, இது நாள் வரை திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு, சொந்த மண்ணிலேயே எம் மொழி மறந்து, எமது கலை,பண்பாடு தொலைத்து, வந்தவனை எல்லாம் வரவேற்பு அறையில் அமர வைக்காமல், வீட்டிற்குள் அழைத்துப் போனது மட்டுமில்லாமல், வீட்டினையே வந்தவன் பெயருக்கே மாற்றியளித்து விட்டு..வீதிக்கு வந்ததோடு மட்டுமில்லாமல்..அப்படி நாதியற்று வந்தததையும், வந்தவனை வாழ வைத்தோம் என்று வாய் கூச பெருமைப் பேசி..எம் மண்ணை,கனிமத்தை, அரசியலை,வாழ்வியலை, கொள்ளையடிக்க, எம் நிலத்தை வேரறுக்க, அவன் வாழ நான் சாக அனுமதித்து விக்கித்து வீதியில் நின்ற எமக்கு.. எமது மற்றொரு தாய்நிலத்தில் பிறந்து அடிமை தேசிய இனத்தின் இழிவுப் போக்க போராடிய எம் தலைவர் பிரபாகரன்.. இந்த மண்ணில் குடியேறி.. கொள்ளையடித்து..கொழுப்பேறி..குடும்பம் குடும்பமாக கூத்தடிக்கும் மற்ற எந்த அரசியல் தலைவரையும் விட மேலானவன் மட்டுமல்ல…அவன் தான் அடிமை இருட்டினில் வீழ்ந்து கிடக்கும் எமக்கு அகப்பட்ட உயிர் வெளிச்சம்.,.அவரைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் சிலஅடிப்படைத் தகுதிகள் தேவையாய் இருக்கின்றன.. நேர்மை..அர்ப்பணிப்பு..பெற்ற மகன்களை கூட இனத்திற்காக இழக்கத் துணிகிற தியாகம் என நீளும் அப்பட்டியலில் ஒன்று கூடாத இல்லாத, ஊழல் நாற்றமெடுத்து அரசியலின் இழிவான சீரழிவாக இருக்கிற ’தமிழக அரசியலின் பிதாமகர்கள்’ அவர் பற்றி பேச தொடங்குவதும் விவாதிக்க கோருவதும் அவர்களது திட்டமிட்ட மற்றுமொரு பிழைப்பு வாதமே…

எம் மண், எம் மக்கள், எம் மொழி என பேசி..உயிரற்ற சடலமாய் உருவமற்று கிடக்கிற..எம் மக்களை உசுப்பேற்றி..இன உணர்வு கொள்ளும் பணியை செய்யும் இளைஞர்களை…தமிழ்நாஜிக்கள் என்று தரங்கெட்ட இவர்களது வசவுகள் அழைக்குமானால்…. ஊழலும், சீரழிவும், ஆபாசமும்,வெட்கக்கேடும்,மோசடியும் ,மாய்மாலமும், இரட்டைநாக்கும், மண்ணின் பூர்வக்குடி மக்களை வீழ்த்தத்துணியும் பிழைப்புவாதமும் உடைய இவர்களை வீழ்த்த வந்த “ தமிழ்நாஜிக்களாக “ நாம் மாற..அல்லது இவர்களே நம்மை மாற்ற வெகு காலம் இல்லை என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது..# உன் முதுகில் ஓராயிரம் அழுக்கு..புழுவைப் போல வளைந்து நெளியும் உன் நாக்கு பேசுகிறது புனிதமான என் தலைவனைப் பற்றி ஓராயிரம் வழக்கு..வெட்கக்கேடு.

2,535 total views, 4 views today

7 thoughts on “ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்

 • யாரு அந்த கொக்கரக்கோ என்ற மடிப்பாக்கத்து அம்பியா? அவனே அந்த பச்சமுத்துவிடம் அடிமையாக உள்ளான்.

  …அந்த கருணாநிதி கும்பலுக்கு குண்டி வழியாக எச்சில் ஊருகின்றது.

  …கருணாநிதியின் மகன்களான அழகிரி…இசுடாலின் பிரச்சனை என்னவென்று கூவட்டும்.

  …கனிமொழியின் திருமணங்களைப் பற்றி பேசட்டும்.

  …ஒன்னேமுக்கால் நிமிடம் உண்ணாவிரதமிருந்த அந்த கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் அந்த கும்பல் முறையான குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

 • இந்திய நாஜிக்களுக்கு . மன்னிக்கவும் எடுபிடிகளுக்கு கொடுக்கப்பட்ட சரியான சவுக்கடி…

 • Ungala ellam Tamil Nazi unnu koopitaratha Vida, Nigazh kaala uvamaiyaa Tamil Taliban ennu koopidanum.

  Jim

 • உங்களைப் போன்ற மானமுள்ள, தமிழுணர்வுள்ள,உண்மையான தமிழர்கள் இன்றும் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், உலகத்தமிழர்கள் தமிழ்நாட்டை இன்றும் அண்ணாந்து பார்க்கிறார்கள், அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதில் அக்கறை காட்டுகிறார்கள், இடைக்கிடையே உரிமையுடன் விமர்சனமும் செய்கிறார்கள்.

  தமிழ்நாட்டின் பொருளாதாரமும், அரசியலும், அதிகாரமும் தமிழரல்லாதவர்களின் கைகளில் இருப்பது மட்டுமல்ல, வலையுலகில் தமிழர் என்ற போர்வையில் உலவுகிறவர்களில் பெரும்பான்மையினர், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தான், தமிழர்கள் எல்லோரும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று பட்டால், தமிழ்நாட்டில் தமது ஆளுமைக்கும், அதிகாரத்துக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில், தமிழர்களின் ஒற்றுமையை வேண்டுகிரவர்களை, தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டுமென்கிறவர்களை நாசிகளாக்கி, தமிழர்களின் வாய்களை அடக்கலாமென்ற அவர்களின் கனவு நனவாகி விடுமோ என்று பயந்தேன். ஆனால் அவர்களை எதிர்க்கும் துணிச்சலுள்ள உங்களைப் போன்ற தமிழர்களும் வலையுலகில் உள்ளார்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

Leave a Reply to யூர்கன் க்ருகியர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *