….யார்..யார்..

    வெம்மை பூக்கும் இப்பாலையில்.. தனிமை யார்.. அனலேறிய நினைவு யார்… துளித்துளியாய் வடியும் இந்த இரவில்.. இருள் யார்.. குளிர் யார்.. அலை அலையாய் தழுவி எழும் இக் கடலில் படகு யார்.. தத்தளிப்பு யார்.. நிலவொளி சிலையாய் உறைந்திருக்கும் இந்தக் குளத்தில் நீர் யார்.. மெளனம் யார்.. வானமே வழிந்து ஓடுவதாய் உணர வைக்கும் இந்த அருவியில் ஓசை யார்.. பாய்ச்சல் யார்.. மேகமாய் திரண்டு வந்து பொழியும் மழை மாலையில்.. தேநீர் […]

325 total views, 5 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

தங்க மீன்களும் அழகனும்..

நிலா முழுகி கிடந்த கடலில் நட்சத்திரங்கள் துள்ளிக்கொண்டு இருந்த அப்பொழுதில் தான்… என் ஒற்றைப்படகில் நான் தனித்திருந்தேன்.. மஞ்சள் வெளிச்சமும், இருண்மையும் மாறி மாறி பிரதிபலிக்கும் இரவு பேருந்தின் சன்னலோர முகத்தோடு நீ லயித்திருந்த பொழுதொன்று ஆகாய அந்தர வெளியில் மிதந்துக் கொண்டிருந்தது.. நிரம்பி ததும்பிய அலைகளின் நுனியில் நேற்றிரவு உன் விழிகளில் மின்னிய அதே சுடர்கள்.. காட்சி மயக்கத்தில் தடுமாறி ஆழ் கடலில் விழுந்த என் மேனி எங்கும்பூத்து மலர்ந்தன அல்லிகள்.. அப்படியே என் இரு […]

540 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

பயணம் என்கிற பெருவழி..

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’ – கோணங்கி (விகடன் 16-09-2009) என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் […]

537 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

      பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம். ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன […]

769 total views, 4 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

  வரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே.. மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . […]

741 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

தி வாக்.. (The walk )

    உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk ) அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை […]

691 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

பொழுதுகள் கடந்த வெளி..

கூந்தலை அள்ளி அப்படியே என் முகத்தில் படர்த்தினாய் …   இது நீள் இரவு என்றேன்..   இல்லை..இல்லை.. சூரியன் இருக்கிறதே இது பகல்.. என்றாய் நீ.. . அது உன் விழிகள்.. இது அதிகாலை என்றேன்.   போடா என்று புன்னகைத்தவாறே இறுக அணைத்தாய்..   மீண்டும் சிரித்தவாறே சொன்னேன்..   இது ஒரு பொன்மாலைப் பொழுதென.. 682 total views, 3 views today

682 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

இளையராஜா – எம் தலைமுறை வாழ்க்கை.

தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.   …..   புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே […]

687 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

திராவிட நச்சுப்பாம்புகளின் விச பெருமூச்சுகளும்.. துரோக கதையாடல்களும்..

சமீப காலமாக இணைய வெளிகளில் தி(ருக்குவளை குடும்ப) முன்னேற்றக்கழகத்தின் இணைய எழுத்தர்கள் செத்துப் போன பிணமாய் தங்கள் ஆட்சி அதிகார கனவு ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து தரம் குறைந்த வசவுகளை.. முக்கிக் கொண்டும், முனகிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.   தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் இருமுறைமைகளாக மட்டுமே பேச உரிமையிருக்கிறது என கருதுகிறவன் நான். ஒன்று அவரின் வீரம், ஈகை , அளப்பரிய உழைப்பு, அதன் வாயிலாக […]

696 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

வசவுகள் உணர்த்தும் செய்திகள்..

சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.) பொய்யும்,புரட்டும்,தேர்தல் அச்சமும் (சொந்தக்காரர்கள் ஜெயிக்கணுமில்ல…) நிரம்பி வழியும் அக்கட்டுரைகள் பற்றி நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட… மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன.. அவையாவன.. தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது.. திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது. தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு […]

686 total views, 3 views today

Posted in கட்டுரைகள்.. | Leave a comment

549 total views, 3 views today