மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பூங்கதவுகளின் புராணம்..

கவிதைகள் /

  மூடப்பட்ட கதவின் மேல் கோபிக்காதே.. ஏனெனில் கதவுகள் மூடுவதற்காகவே தான் தயாரிக்கப்படுகின்றன. மூடப்படுவதை உன் நம்பிக்கை கோபுரத்தின் மேல் விழுந்த பேரிடியாக கருதாதே.. அது.. இன்னொரு திறப்பிற்கான வழி.. மூடப்படுவது உன் முகத்தில் உமிழப்பட்ட எச்சிலாக கருதி உன்மத்தம் கொள்ளாதே.. திறந்திருந்தால் உன் கனவின் மீது படியும் ஏமாற்ற நிழலை எங்கே கொண்டு புதைப்பாய்..?? மூடப்படுதல் ஓரு வாக்கியத்தின் முற்றுப்புள்ளி. நீ எழுத இருக்கிற காப்பியத்தின் தொடக்கப்புள்ளி.. மூடப்படுதல் ஒரு நிராசையின் முடிவு. இன்னொரு விடியலுக்கான …

522 total views, no views today

பிரிவொன்றின் மழை..

கவிதைகள் /

இறுதியாக பிரிதலுக்காக நீயே மழை ஒன்றை தயாரிக்கிறாய்‌.‌. வெறுமைக் காரணங்களையும்.. வலிந்து திணித்த போலி நியாயங்களையும் கொண்டு தயாராகிறது மழை.. நேசிப்பின் மேகங்களை வெறுப்பின் கருமைக் கொண்டு இருளாக்க மறதிக் காலம் ஒன்று அவசரத் தேவையாக ஆம்புலன்சில் வருகிறது. விழியோரம் கனவொன்று சட்டென்று கசிந்து விடக்கூடாது என்கிற கவனம் விரிய காத்திருக்கும் பிரிய குடை ஒன்றை மடித்து வைக்கிறது.. நிலாக்கால நினைவுகளின் ஏக்கப்பெருமூச்சுகள் பெருங்காற்றாய் வீச.. பிரிவின் மழை மேகம் கலையுமோ என அஞ்சுகிறாய். பிறகு நீயே …

542 total views, 1 views today

நதியற்ற பாவம்.

கவிதைகள் /

      நதிகளில் தொலைக்க பாவங்கள் இருக்கின்றன.. பாவம். நதிகள் தான் தொலைந்திருக்கின்றன. 474 total views, no views today

474 total views, no views today

நேற்றிருந்தவர்களின் கதை.

கவிதைகள் /

  நேற்றிரவு அவர்கள் இருந்தார்கள்.. நேற்றிரவு இந்த நொடியில் அவர்கள் உறங்கியும் இருந்தார்கள்.. கண் மூடி கதகதப்பாய்.. நாளையும் இப்படிதான் உறங்கப் போகிறோம் என்ற நம்பிக்கைகளோடு.. நேற்றிரவு குளிர்மையாய் உறைந்திருந்த சில தோட்டாக்கள் அச்சமயம் புன்னகைத்ததை அவர்கள் அறியவில்லை.. ……. புற்றில்லாத உடலோடு நஞ்சற்ற நிலத்தில் வாழ்தலென்ற கனவோடு அவர்கள் காலை விழித்தார்கள்.. அதிகாரத்தை அரிதாரமாக பூசி இருக்கும் அரச துவக்குகள் ஏற்கனவே வேதாந்தா வீசிய எலும்புத் துண்டுகளுக்காக நாய்களாக மாறிய கதை தெரியாமல்.. எதிர்காலம் என்பதை …

426 total views, no views today

வண்ணமற்ற சொற்கள்.

கவிதைகள் /

நிறமற்ற என் சொற்களின் மீது உனக்கு பிடித்த வண்ணத்தை பூசி விடு.. கூடவே அப்போதைய உன் மனநிலைக்கு தகுந்தாற் போல்… ஒரு அந்தியையோ.. ஒரு மழையையோ.. கூதிர் காலமொன்றையோ.. வெண்பனிச் சாரலையோ.. கொடும் பாலையையோ. . அவசியம் இணை. சொற்களை கரைத்து விழுங்கும் பின்னணி இசை இசைக்கப்படின் இன்னும் பிரமாதம். முடிவில் ஒரு மலை முகட்டின் மேலமர்ந்து தனிமைப் பொழுதொன்றை நீயே தேர்ந்தெடு. என் சொற்களை உடை அவிழ்ப்பது போல.. தனித்தனியே கழற்று.. கலைத்துப் போடு. நிறைவேறாத …

858 total views, no views today

பிம்பம் தாங்காத ஆடி..

கவிதைகள் /

        …ஆகப்பெரும் கண்ணாடியாய் கனவு பிம்பங்களை மாறி மாறி வரும் வாழ்வின் உதய, அஸ்தமனங்களுக்கு ஏற்ப வாரி இறைத்துக் கொண்டிருந்தோம். சரிவொன்றின் சங்கடப்படுத்தும் நிழலொன்றில் கூட கலையாத பிம்பமாய் நம் பற்றை தகவமைப்பதில் கவனம் கொண்டிருந்தோம். பிசிறில்லா இசையாய் மாசற்ற கவிதையாய் அருவமான அற்புதமாய் அது நிகழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் என உறுதி கொண்டோம்.. தவறுகள் மீதும் காரணங்கள் மீதும் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையாய் அது காட்டப்பட்டு விடக் கூடாதென்றும்.. சின்ன …

871 total views, no views today

இருட்பாதையின் திசை வழி..

கவிதைகள் /

பொய்கள் பாசியென படர்ந்திருந்த குளமொன்றில் அரூவ மீனாய் நீந்திக்கொண்டிருந்த உன்னை நோக்கி எறியப்பட்ட தூண்டில் வாயில்தான் என் கனவொன்று இரையாய் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. எதிர்பாராமின்மையை சூட்சம விதிகளாய் கொண்டிருக்கும் அந்த மாய விளையாட்டில் அவரவர் பசிகளுக்கேற்ப சொற்களின் பகடையாட்டம் நடந்தன…. உக்கிரப் பொழுதில் தாங்காமல் நிகழ்ந்த பெரு வெடிப்பு . கணத்தில் சிதறிய என் சிலுவைப் பாடுகளின் கதறல் ஒலிகள் உன்னால் சில்லறைகளின் சிந்திய ஓசை என அலட்சியப் படுத்தப்பட்ட நொடியில்.. திரும்பவே இயலா …

1,976 total views, 1 views today

நிழலற்ற கோபுரம்

கவிதைகள் /

    அந்த கோபுரம் அவ்வளவு எளிமையானதல்ல.. விழி வழியே அளந்து விட விண்ணை உரசும் அதன் உயரம் அனுமதித்ததில்லை.. மேனி முழுக்க சிற்ப எழில் பூசி நிற்கும் திமிர் பல உளிகளின் வலி தாங்கி உருவான வசீகரம். நிலாவை உடலில் போர்த்தி சுடர்விட்ட ஒரு இரவில் தான்.. அந்த கோபுரத்தை கண்டவர்கள்.. அது வெறும் கற்களால் ஆனது அல்ல.. கண்கள் முழுக்க சுமந்த கனவின் கனல் என கண்டார்கள்.. வானெங்கும் சிறகு விரித்து இறகு கவிதை …

1,013 total views, no views today

காதலின் பெருங்குளம்..

கவிதைகள் /

      https://youtu.be/rMAOPsp5EB0 நினைவுகள் பாசியாய் படர்ந்திருக்கிற அந்த விழிகளில்தான்.. தவழும் கனவலைகளில் தவிப்போடு நான் நீந்துகிறேன்.. காற்றின் சிறகுகளோடு கணப்பொழுதுகளில் கைக் கோர்த்து நடம் புரிகிற அந்த காரிருள் கூந்தல் இழைகளில்தான் நான் விழித்திருக்கிறேன். அசையா நொடிகளில் கசிந்துருகி.. இமையோரம் ததும்பி நதியென பின் பெருக்கெடும் கண்ணீர்த் துளிகள் வழிகிற அந்த செம்மை கன்னக் கதுப்புகளில் தான் நான் உயிர்த்தெழுகிறேன்.. மோகத்திரள் மழை மேகமாய் கருக்கிற முடிவிலி இரவில் .. நிகழாத பெளர்ணமிக்காக காத்திருக்கும் …

1,009 total views, no views today

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

கவிதைகள் /

    அந்த அழகான பலிபீடம் அந்த ஒற்றை வெள்ளாட்டின் முன் கருணை விழிகளோடு வீற்றிருந்தது.. குளிர்மையும் வழுவழுப்பும் நிரம்பிய அதன் வளைவுகளில் வெள்ளாடு லயித்திருந்தது.. அழகானது இது.. தலை பொருந்துவது போன்ற வளைவு.. சற்றே சாயலாம். கொஞ்சம் உறங்கலாம்.. வெள்ளாட்டின் விழிகளில் வண்ணக்கனவுகள் மிளிர்ந்தன.. கத்தியின் கனம் தெரிவு செய்ய வெள்ளாட்டின் கழுத்து மிருதுவான வருடல்களால் ஆராயப்பட்டது.. தனித்தே பிறந்த,திரிந்த வெள்ளாடு தன் மீது சொரியும் வருடல்களால் கசிந்தது.. எவ்வளவு கதகதப்பான கரங்கள்.. ஆதரவாய்..ஆதுரமாய்.. நீ …

829 total views, 1 views today