தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்

காலங்களின் நெடுவாசற்
கதவுகள் திறக்க
நாகரிகக் கொடிப் பிடித்து
நடக்கின்றார் மானுடர்கள்….

வரலாற்றின் திரை விலக
வருகின்றார் வருகின்றார்
தற்காலம் பாராட்டும்
பொற்கால புத்திரர்கள்…
-கவிஞர் இன்குலாப்

காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது….

சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய பொருண்மைகள் அல்ல….

தந்தை பெரியார் என்ற பதவி அரசியலில் இறங்காத தன்னலமற்ற சுயமரியாதைக் காரர் முதல் வாரிசுகளே இல்லாமல் இறந்துப் போன அறிஞர் அண்ணா,கர்மவீரர் காமராஜர், போன்றவர்களும் ,எளிமையின் வடிவாக திகழ்ந்த பொதுவுடையாளர் ஜீவா,கக்கன் போன்றவர்களும் தமிழக அரசியலில் சுடர் விட்டு மின்னியவர்கள்தான்.இவர்களுக்கு சினிமா பிரபல்யமோ,சாதீய அடையாளமோ இல்லை .ஆனால் நவீன தமிழக அரசியலின் முகம் தற்போது வெகுவாக மாறி விட்டது.மக்கள் FAST FOOD சாப்பிடுவது போல அரசியலையும் பார்க்கத் துவங்கி விட்டனர்..

திராவிட பெரியாரிய அரசியலின் மிச்சமுமாகவும், தமிழக அரசியலின் மூத்த தலைமையுமாகவும் இருக்கின்ற கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் நெடிய அரசியலின் முக்கிய பங்கேற்பாளராகவும்,இன்றியமையாத நிகழ்வுகளின் முக்கிய சாட்சியாகவும் திகழ்கிறார்.தனது பழுத்த அரசியல் ஞானத்தின் மூலம் தலைநகர் அரசியலையும் கட்டுப் படுத்த நினைக்கிறார்..பெரியார்,அண்ணா ஆகியோரிடம் அரசியல் பயின்று ராஜாஜி,காமராஜர் போன்ற வலுவான ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்து ,எம்.ஜி.ஆரிடம் விவரிக்க இயலா நட்பில் திளைத்து பிறகு அதே அளவிற்கு போரும் புரிந்து,இறுதியில் இன்று ஜெயலலிதாவை புள்ளி விபர அறிக்கையால் வீழ்த்த நினைக்கும் கருணாநிதி களைப்பறியா அரசியல் வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..ஆனால் கலைஞரே தன் வாழ்வினை திரும்பிப் பார்த்து மீள் ஆய்வுக்கு உட்படுத்துவாராயின் அவருக்கு சுய திருப்தி உண்டாகுமா என்பது அவர் மட்டும் அறிந்த ரகசியம்.

அதே போல ஜெயலலிதாவும்,கான்வெண்டில் படித்து சினிமாவில் அறிமுகமாகி,எம்.ஜி.ஆர் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து சினிமா கவர்ச்சி மட்டும் இல்லாமல் தன் சுய ஆளுமை தன்னம்பிக்கை அறிவினால் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு சில முன்னாள் அமைச்சர்கள் மூலம் அ.தி.மு.க தலைமையை பிடித்து ,தி.மு.க விற்கு மாற்றாக அ.தி.மு.க வை மீண்டும் முன்னிறுத்தி முதல்வரானார்.எந்த பிடிவாத குணமும்,கோபமும் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றனவோ,அவையே அவரை வீழ்த்தியும் காட்டின. நல்ல ஆங்கில அறிவு,துணிச்சலான முடிவுகள் போன்ற பாஸிட்டிவ் குணங்களும் அவரை உயர்த்தி பிடிக்கின்றன என்றால் தடாலடி மாற்றம், யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லாதன்மையை நீடிக்குமாறு செய்வது போன்றவை அவரை பலவீனப்படுத்துகின்றன.

எனவே மேற்கண்ட இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு பிறகு அல்லது அப்பால் வர இருக்கும் தமிழகத்தின் இளம் தலைவர்களை முறையான சிந்தனைகளுக்கு
உட்படுத்துவது சரியானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது….

தமிழகத்தின் வருங்காலம் என்ற எதிர்கால கனவு யாரால் நிறைவேற உள்ளது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை காண புறப்படும் முன் தமிழகத்தின் முக்கிய இளம் ஆளுமைகள் பற்றி சிறிது ஆராய்வோம்.

மு.க.ஸ்டாலின் –இவர் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதும் ,தி.மு.க தலைமையினாலேயே அடுத்த தலைவராக அடையாளப்படுத்த படுகின்றவர் என்பதும் வெளிப்படையான ஒன்று….தலைவர் மகனாக இருந்தாலும் தலைமைப் பதவிக்கு இவர் தாவி வந்து விட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மிசா சிறைப் பொழுதுகளில் கைதியாகவும்,தி.மு.க. வின் அனைத்து அரசியல் போராட்ட நிகழ்வுகளிலும் தலைமை பங்கேற்பாளராகவும், பல ஆண்டுகளாக தி.மு.க வின் இளைஞர் அணித் தலைவராகவும், இருந்து வருகிறார்….சென்ற முறை சென்னை நகர மேயராகவும்,பணியாற்றிய இவர் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.தற்போது பக்குவமான மனநிலைக்கும் நிதானப் போக்கிற்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதாக உணரப் படும் இவர் மிகவும் கவனிக்கத் தக்கவர்…ஆனால் கலைஞரிடம் காணப் படும் அயராத உழைப்பு, ஆழ்ந்த இலக்கிய அறிவு, அரசியல் சாதுர்யம்,துணிச்சல் போன்றவை ஸ்டாலினுக்கு கைவருமா என்பது கேள்விக்குறியே…மேலும் கட்சியில் பலம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலைஞருக்கு கட்டுபடுவது போல தளபதிக்கும் கட்டுப் படுவார்களா என்பதும் சிந்தனைக்குரியது.கலைஞர் அளவிற்கு ஸ்டாலினிடம் இல்லாத வசீகர வார்த்தை பிரோயகங்கள் தளபதிக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன

வைகோ-தி.மு.கவில் இருந்தப் போதிலும் சரி,விலகி ம.தி.மு.க துவக்கிய போதிலும் சரி இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற வைகோ தன் அரசியல் முடிவுகளால் வெற்றிகளை அடையாத அடையாளமாக மாறிப்போனது குறிப்பிட தகுந்த உண்மையே.தன் சிம்மக்குரல் தமிழோசையிலும் ,தமிழ் இலக்கிய ,உலக வரலாற்று அறிவிலும் சிறந்தவரான வைகோவின் மாறாத ஈழ ஆதரவு அவரை பொடாச் சட்டத்தின் கீழ் சிறைப் படுத்தியது.ஆனால் கருணாநிதியின் குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டிவிட்டு தனிக்கட்சிக் கண்டு பிறகு தாய் கழகத்தோடு கூட்டணி கண்டதும்,தன்னை பொடாச் சட்டத்தில் சிறையில் அடைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சகோதர பாசம் கொண்டாடியதையும் கண்டு தமிழகம் குழம்பிப் போனது.

விஜய்காந்த்- சினிமா நடிகர்களின் கனவு அல்லது இலக்கு அரசியல் என்றாகி விட்ட நிலையில் விஜய்காந்த் குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார் என்றே சொல்லவேண்டும்..சட்டசபை மற்றும் உள்ளாட்சி,இடைத்தேர்தல்களில் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதிகரித்து வருவதையும்,சினிமா மோகம் குறையாத தன்மையையும் ஒரு சேரப் பிரதிபலிக்கின்றன.பட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடியதும், மற்ற கட்சிகள் அசர வைக்கும் அளவிற்கு புதுக்கோட்டையில் அடாத மழையிலும், விடாது மாபெரும் கூட்டம் கூட்டி மாநாடு நடத்தியதும் கவனிக்கத் தகுந்தவை.ஆனால் கூட்டணி இல்லாமல் வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை என்பதும் , கணிசமான ஓட்டுகளே வெற்றியாகாது என்பது கேப்டனுக்கு தெரியும் .மேலும் கட்சியில் வந்து சேரும் மற்ற கட்சிகளில் ஓரங்கட்டப் பட்ட முன்னாள் அமைச்சர்கள் ,ஊழல் குற்றம் சாட்டப் பட்டவர்கள் போன்றவர்கள் கட்சிக்கு பலமா, பலவீனமா என்பதும் ஆய்வுக்குரியது.

மு.க.அழகிரி.-கலைஞரின் மகன் என்பதை விட மதுரையின் மைந்தன் என்றே அதிகம் அறியப்பட்டு வந்துள்ளார்…மு.க. ஸ்டாலினுக்கும் ,இவருக்கும் அதிகாரப் போட்டி நடப்பதாக திரை மறைவில் கிசுகிசுக்கப்பட்டாலும் தன் தம்பியோடு சேர்ந்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த முயல்கிறார்.தேர்தல் பணிகள் என்றால் வெற்றிக்கனியை பறிக்க இவர் காட்டும் தீவிரமாகட்டும், தென் மாவட்ட கழகப் பணிகளில் முன்னிலைப் படுத்தப்படுவதாகட்டும் அழகிரிக்கு நிகர் அழகிரிதான்…..ஆனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்த படுவது ,அழகிரி ஆதரவாளர்கள் மேல் உள்ள முரட்டுத் தன இமேஜ் போன்றவை மற்ற மாவட்ட மக்களிடம் செல்வாக்கை வளர்க்குமா என்பது சந்தேகமே.

கனிமொழி கருணாநிதி- சிறந்த கவிஞராக அறியப்பட்ட இவர் தலைவரின் மகள் என்பதாலும்,தயாநிதி மாறன் இடத்தை நிரப்பவும் எம்.பி ஆக்கப் பட்டுள்ளார்..தி.மு.க வின் பெண்ணினப் பிரதிநிதியாக அறியப் படும் இவர் கட்சியின் அமைப்புகளிலும்,கட்சியின் 2 மற்றும் 3 ஆம் மட்டத் தலைவர்களில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்.இன்னும் பொது வாழ்க்கைக்கு அடிப்படை அம்சமான பொதுத் தள பங்கேற்பு அவ்வளவாக இல்லாதத் தன்மையில் தன் தனிப்பட்ட குணாதிசியங்கள் மூலம் அரசியலில் தன் முக்கியத் துவத்தை நிலைநிறுத்தப் போராடுகிறார்.

பட்டாளி மக்கள் கட்சிவன்னியர் இன மக்களுக்கான கட்சி என்ற முத்திரையை நீக்க மருத்துவர் ராமதாஸ் முயன்று வருகிறார்.ஆளும் கட்சிக்கு இவர் நண்பனா,எதிரியா என்பது அன்றைய காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தால்தான் தெரிந்துக் கொள்ளமுடியும்.இவரது மகன் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அப்பாவை போன்ற அதிரடி அரசியலுக்கு இன்னும் பழக வில்லை என்றுதான் கூற வேண்டும் .பசுமைத் தாயகம், மக்கள் தொலைக்காட்சி போன்ற செயல்பாடுகள் கட்சியின் இளம் ஆளுமை சின்ன அய்யாவை உச்சிக்கு கொண்டு செல்லுமா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.

அதே போல் நாடார் இன ஒட்டுவங்கியை குறிவைத்து கட்சி துவங்கி இருக்கும் சரத்குமார், தேவர் இன ஒட்டு வங்கியை குறிவைத்து செயல் படும் பார்வர்ட் பிளாக் கார்த்திக் போன்ற நட்சத்திரங்களும் அரசியல் திரையிலும் மின்ன முயல்கிறார்கள்….

காமராஜர் ஆட்சிக் கனவிற்கு பங்காளியாக சரத்குமார் வந்து விட்டாலும், சளைக்காமல் இன்னும் கனவில் இருப்பது காங்கிரஸ் தான்….மத்திய அரசியலுக்காக மாநில கட்சியின் வளர்ச்சி புறக்கணிக்கப் படுகிறது என்ற புலம்பல் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கோஷ்டி மோதல் களுக்கும் நடுவில் மெலிதாய் கேட்கத்தான் செய்கிறது… மத்திய அமைச்சர்களான ஜி.கே.வாசன்,ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்களுக்கு காங்கிரஸில் பதவிகளை தன் ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தரவே நேரம் சரியாக உள்ளது….. இளம் தலைவர்களான கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத் போன்றவர்கள் எதாவது செய்து ஊடங்களில் இடம் பெறத் துடிக்கிறார்கள்.கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தி.மு.க ஆதரவு என்ற பேச்சும் உண்டு….

அ.தி.மு.க வை பொறுத்த வரை எல்லாம் ஜெயாமயம்.இரண்டாம் மட்டத் தலைவர்கள் நிரந்தரமல்லாதவர்கள்…பதவியில் இருக்கிறோமா என்று அம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது. கட்சியின் அதிகார மையமாக செயல்படுவதாக மற்றக் கட்சிகளால் குற்றம் சாட்டப் படும் சசிகலா,நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினரின் பங்கு அதிமுக வில் முக்கியமான பொருண்மை என பொறுமி தள்ளுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள் . ஆனால் ஜெயலலிதா வழக்கம்போல் அதிரடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும், கட்சி அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் கிடைக்கும் ஆரத்தி உள்ளிட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டும்,உடன் பிறவா சகோதரியோடு பயணம் செய்துக் கொண்டும் அரசியல் செய்து வருகிறார்….தி.மு.க வில் கலைஞருக்கு பிறகு கைக் காட்ட தலைவர்கள் உள்ளனர் என்றால் …அம்மா கட்சியில் இதுப் பற்றி சிந்திக்கவே யாருக்கும் துணிச்சல் வராது.

தமிழக இடதுசாரிகள் தேர்தல் சமயங்களில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகள் பெற்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிப்பதை தவிர முக்கியத்துவம் பெற்று விட வில்லை என்பதும் உண்மை.இடதுசாரிகளில் எளிமைக்கு பேர் போன ஜீவா, நல்லக் கண்ணு போன்ற தலைவர்கள்
கவர்கிறார்களே தவிர அதிகாரத்திற்கு அவர்களாலே வர முடிய வில்லை.
தமிழக செய்தி ஊடகத் துறையில் பன்முகத் தடம் பதித்துள்ள மாறன் சகோதரர்கள் இன்னமும் தமிழக அரசியலை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டுருப்பதாக சொல்லப் படுகிறது.பல்வேறுப் பட்ட
செய்தித்தாள்கள்,பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் என்று தன் சாம்ராஜ்ஜியத்தை
நிறுவியுள்ள சன் குழுமம் தற்போது ரூ.75க்கு டி.டி.எச் தொழில்நுட்பத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஊடகத்துறையின் ஏகபோக ஜாம்பவான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சன் குழுமம் தமிழக அரசியலில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.கலைஞரும் தன் பேரன்கள் தான் தனக்கு போட்டி என நினைத்து பல முயற்சிகள் எடுத்து வருவது அவரது குடும்பத்திற்குள் இழையோடும் பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது…..அதன் சமீபத்திய முடிவு கலைஞர் தொலைக்காட்சி.

ஆனால் தமிழக மக்களுக்கு இதுப் பற்றி எல்லாம் கவலை இல்லை.. கொள்கை,நேர்மை,தனி மனித ஒழுக்கம்,சமூக எண்ணம் மொழியுணர்வு போன்ற தளங்களில் அவர்கள் தலைவர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து வெகு நாட்களாகி விட்டன….ஊடகப் பரபரப்பை கூட்ட அரசியலை ஒரு காரணியாக வைத்து பார்க்க மக்கள் தயாராகி விட்டனர்.தேர்தல் அறிக்கைகளில் பொங்கி வழியும் சலுகை பாயாசமும் ,வாக்களர்களின் கரங்களில் திணிக்கப் படும் தேர்தல் கால பணப் பாதுஷாக்களும் மக்களுக்கு சர்க்கரை நோயை வரவழைத்து விட்டன போலத் தோன்றுகிறது…….தீயது என்று தெரிந்தும் திருட்டுத் தனமான சுவராசியத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழ்நாட்டு வாக்காளனைப் பொறுத்த வரை இம்முறை அரிசியும்,இலவச டி.வியும் வெற்றிப் பெற்றன….அடுத்த முறை இதை யார் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு…..விஜய்காந்த் பெற்று வரும் கணிசமான ஓட்டுக்கள் வெகுவாக கவனிக்கத் தக்கவை. தி.மு.க, அ.தி.மு.க க்கு மாற்றாக ஒரு சக்தி வேண்டும் என்று விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையே இது காட்டுகிறது எனலாம்.அணி சேராத கட்சிகளின் பிரதிநிதியாக விஜய்காந்த் முன்னிறுத்தப் பட்டால் தமிழக தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.இதே நம்பிக்கையோடு தான் சரத்குமாரும் புதிதாக கட்சி துவங்கி உள்ளார்.நாடார் இன மக்களுக்கான கட்சி என்ற தோற்றத்தை முறியடிக்க அவர் வெகுவாக முயன்று ,தன் கட்சி அனைத்து மக்களுக்கானது என்று உணர்த்தவே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் சூட்டி உள்ளார்.

சென்ற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மை பெறாததது ஆராயத்தக்கது.1952 வருட சட்டமன்ற தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் எதாவது கட்சிக்கு பெரும்பான்மை பலம் அளித்து வந்த தமிழக வாக்காளர்கள் இந்த முறை தி.மு.க விற்கு பெரும்பான்மை பலம் வழங்காததது தமிழகம் தென்னிந்தியாவில் மற்றுமொரு கேரளாவாக உருவெடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இனிவரும் தேர்தல்களும் இந்தப் போக்கையே பிரதிபலிக்கும் என நம்பலாம் .மேலும் சாதீய அரசியலின் பங்கும் தேர்தல் களத்தில் முக்கிய பணியாற்றும் என தெரிகிறது.கொள்கைகள் நீர்த்துப் போன கட்சிகள் நிறைந்த தேர்தல் களத்தில் பெரும் பாலான கிராமப் புற இளைஞர்கள் சாதீய அரசியலின் பால் ஈர்க்கப் படுகின்றனர் .மேலும் மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து செயல் படுவது ,உள்ளூர் அரசியல் தன்மை போன்றவை ஒரு கட்சி பெரும்பான்மை என்ற அம்சத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.

தலித்திய அரசியல் செய்யும் தலைவர்களான தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் வடக்கே மாயாவதி போல பெரிய சக்தியாக உருவாகாமல் போவது தமிழகத்தின் மற்றொரு தன்மையாக கொள்ளலாம். அதேபோல் தேசிய இயக்கமான காங்கிரஸ் திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பிறகு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும், அந்த இடத்தில் இருந்து முன்னேற முடியாமல் கட்டுண்டு கூட்டணி சுகத்தில் மீள முடியாமல் இருப்பதும் முக்கிய நிகழ்வுகளே.

காலம் என்பது காற்றை போன்றது…காலி இடம் என்று ஒன்று ஏற்பட்டால் காலமே தலைவர்களை உருவாக்கும் தன்மை கொண்டதுதான் .அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு எதிர்பாராத வேளையில் கருணாநிதியும்,, அவருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரும் உருவானார்கள் …..வருங்காலத்தில் உணர்ச்சி வயப்பட்டு வாக்களிக்கும் கூட்டம் வெகுவாக குறைந்து போகும் என்றுதான் தோன்றுகிறது. வாரிசுகளின் யுத்தமும், சாதீயச் சத்தமும்
அதிகமாகும் போலத் தான் தோன்றுகிறது.இது வெறும் தோற்ற மயக்கமாகவே போகக் கடவது.

ஆனால் தேசிய நலனை முன் வைக்கிற கொள்கைகள் இனிமேல் மாநில அளவில் எடுபடாது என்றுதான் தோன்றுகிறது..மேலும் மாநில நலன் காக்கும் கோஷங்கள் முன் வைக்கப்பட்டால் தேசியக் கட்சிகளுக்கு சிக்கல்தான்…ஆனால் சினிமாவின் மீது தமிழகத்தின் காதல் தொடர்கிறது..ஏதாவது தேர்தல் வந்தால் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்பது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.விஜய்காந்த் எதிர்காலத்தில் காங்கிரஸோடு கூட்டணி காண முயல்வார்….ஆனால் அவரது முயற்சிக்கு இன்றைய தடையான தி.மு.க நாளை மூன்றாம் அணியை இடது சாரிகளோடு இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளது…..வைகோவின் நிலை இனி என்ன என்பது யாருக்கும் தெரியாது.அம்மா,அய்யா இரண்டையும் தவிர்த்து அவர் தனியே நின்றும் பார்த்து விட்டார்.பலனில்லை.

நம் மக்களும் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்….இல்லையேல் புதிதாக அவர்களே தலைவர்களை சிருஷ்டிப்பார்கள்….

காலம் என்னும் வற்றாத நதியில் தமிழக அரசியல் விதி விலக்கா என்ன…?

தோன்றி அழிவது வாழ்க்கை-இதில்
துன்பதோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும்-களி
மூழ்கி நடத்தல் பர சிவ முக்தி
-மகாகவி பாரதியார்

178 total views, no views today

மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….

இந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்….ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை…அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை…மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை… இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்… இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன வென்றால்… பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்….என்ற கருத்தாக்கம் மட்டுமே….

அடிப்படையில் பல்வேறு இனக்குழுக்களின் நம்பிக்கைகளின் தொகுப்பாகத்தான் இந்து மதம் திகழ்கிறது…எனவே முதலில் இந்து மதத்தை மதங்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு…இந்து மதம் என்ற கற்பிதம் பார்ப்பனர்களின் பொருளாதார, சமூக மதிப்பீடுகளுக்கு ஆணிவேராக திகழ்கிறது….எனவே தான் எந்த சாதியைக் காட்டிலும் பார்ப்பனர்களில்தான் நாத்திக,இடதுசாரி சிந்தனைகள் குறைவாக உள்ளது
மேலும் மற்றவர்களை காட்டிலும் பார்ப்பனர்களே இந்து மதம் என்ற கற்பிதத்தை தூக்கி நிறுத்துவதில் முதன்மையானவராக திகழ்கின்றனர்…..

எனவே மதம் என்ற அடிப்படைவாதம் மூலமாக அரசியல் ,சமூக மதிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை கண்டடைய பார்ப்பனர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்…

எனவே மதம் என்ற ஒரே ஒரு அடிப்படைவாதத்தை வைத்துக் கொண்டு மக்களை
மதம் என்ற போதையில் ஆழ்த்தி, ஒட்டு மொத்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம், பார்ப்பன உயர்வு, மனு நீதி தர்மம் போன்றவற்றை அடைய எண்ணும் RSS ,VHP போன்ற அமைப்புக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தேவை இல்லை என்பது என் கருத்து….

233 total views, no views today

223 total views, no views today

சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3

சேகுவேரா….ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,,

சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்
விற்று தீர்கின்றன… அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்…

சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்…
அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி…இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர வைக்கிறது.ஒரு மரணத்தின் மதிப்பு இவ்வளவு தானா…? என்று சிந்திக்க வைக்கிறது அவரது முகம்..ஓரு புரட்சிக்காரனின் பணியை வெகு நேர்த்தியாக செய்தார் சே.அவர் மரணத்தின் வாயிலில் நின்று சொன்ன வார்த்தை “நான் இன்னும் இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறேன்”

ஆமாம்..உண்மைதான் ..சே என்றும் தேவைப்படுகிறார்

(தொடரும்)

219 total views, no views today

264 total views, no views today

சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2

சேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடு
தென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்
எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்நாளில் முக்கிய திருப்பமாகும்….

அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்….

சே மற்றும் அல்பெர்தோ கிரானடோவின் நாட்குறிப்புகளை பயன் படுத்தி வால்டர் சாயேஸ் என்பவர் THE MOTOR CYCLE DIARIES என்ற உலகப் புகழ்ப் பெற்ற
படம் தயாரித்தார்..அந்தப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன்…..அற்புதமான ,இயற்கை சுழலில் படம் பிடிக்கப் அப்படம் காண்போரை நெகிழ்ச்செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் .அல்பர்தோ கிரானாடோவின் பயணக்குறிப்புகள் தமிழில் ஜி.குப்புசாமி மொழிப் பெயர்ப்பில் ‘சேகுவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது…..
(வ.உ.சி.பதிப்பகம் வெளியீடு விலை:ரூ.100/-)

சேகுவேரா ஒரு காவிய நாயகனுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார்.அவரின் மிக கவர்ச்சியான முகம் ,கள்ளங்கபட மற்ற அவரின் பார்வை,நட்பை கொண்டாடும் அவரின் புன்னகை, இவை அனைத்துமே அவரின்
புகழை மேலும் உயர்த்தி சென்றன……

அது மட்டுமல்ல அவரின் சமரசம் ஏதும் அற்ற புரட்சிக்கர மனநிலை யாருக்கும்
கிடைப்பது அரிது…
ஒரு புரட்சிக்காரனின் தேவை என்ன என்பதை அவரே கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்…..

“ஒரு புரட்சிக்காரனின் தேவை எதுவென்றால்

1.வெகு நடப்பதற்கும், ஒடுவதற்கும் ஏதுவான வலிமையான கால்கள்
2.தூக்கும் போது உறுத்தாத எளிய வாழ்விற்கு போதுமான, இன்றியமையாத
பொருட்களை உள்ளடக்கியதுமான சிறிய சுமை………….
3.சிறிதளவே சாப்பிட்டாலும் தாங்கும் பிச்சைக்காரனின் வயிறு….

இதைவிட யார் புரட்சிக்காரனின் தேவைகளை யார் சொல்லிவிட முடியும்?,,….

இதைவிட அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி என்பதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது..தீவிர ஆஸ்துமா நோயின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதே வேகத்தில் ஏகாதிபத்திய சக்திகளை தாக்கிகொண்டிருந்தார் என்பது மானுட சமூகம் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும்,போர் மனநிலையையும் ஒரே சமயத்தில் பெற்றிருந்தார் என்பது சிறப்பு…

(தொடரும்)

237 total views, no views today

244 total views, no views today

சேகுவேரா-என்ற கனவு மானுடன்…

நமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்
சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்
சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேரா
மட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….
-தோழர்.பிடல் காஸ்ட்ரோ..

சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்
விழ துவங்கியது……முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது…

அந்த ஒரு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர போதுமானதாக இருந்தது…..அவர் எல்லா சர்வாதிகாரங்களுக்கும் சவாலான சாகசக்காரராக எனக்கு தோற்றமளித்தார்…..அதுவும் அந்த புகைப்படத்தில் அவர் காட்டும் அலட்சியம் உள்ளடக்கிய கம்பீரம் உலகப் புகழ் வாய்ந்தது.

ஒரு தனி மனிதன் மீது பார்த்தவுடன் பற்று வர அவரது முகப் பொலிவும்,தோற்றக் கவர்ச்சியுமே போதுமான அம்சங்கள் என்ற வகையில்
எடுத்த வுடன் சேகுவேரா எனக்கு பிடித்த ஆளுமை ஆனார்….

பிறகு திருச்சி சட்டக்கல்லூரியில் நான் பயின்ற போது அங்கு ஒரு கருத்தரங்கிற்கு
வந்த ஒரு வெளிநாட்டவர் அணிந்திருந்த சட்டையில் சேகுவேரா படம் பார்த்தேன்…
அதுக் குறித்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு புரட்சியாளர்
என்ற தகவலையும்,கியூபா நாட்டில் எழுந்த புரட்சியின் கதாநாயகன் என்றும் தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.

பிறகு சேகுவேராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினேன்.பிறகு
விடியல் பதிப்ப்பகம் வெளியிட்டு உள்ள சேகுவேரா-வாழ்வும்,மரணமும் என்ற
நூலை வாங்கினேன்…….அது எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது….
என் மாமா நான் ஆசைப்படுவதை எண்ணி அந்த புத்தகத்தை வாங்கிகொடுத்தார்…. ஒரு மூன்று மாதக் காலம் நான் அந்த புத்தகமும்,கையுமாகவே அலைந்தேன்..என் திருமண நாளன்று கூட கிடைத்த சிறு
ஒய்வில் கூட படித்துக்கொண்டிருந்தேன். முதலிரவு முடிந்து பின்னிரவில் எனக்கு ஏற்பட்ட விழிப்பில் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன்….

எனக்கு புதுமனைவி மீது இருந்த காதலை விட சேகுவேரா என்ற அந்த மாபெரும் புரட்சிக்காரனின் மீது இருந்த பற்று மிக அதிகமாக இருந்தது…….

சேகுவேரா பிடிப்பட்ட பொழுதுகளை படித்த போது விம்மி வெடித்து அழுதேன்….
அவர் சுட்டுக் கொல்லப் பட்டதை படித்துவிட்டு எனக்கு ஏற்பட்ட கடுமையான துயர் என்னை கடுமையான காய்ச்சலில் வீழ்த்தியது……

அப்படிப் பட்ட ஒரு புரட்சிக்கரமான ,அழகு மிளிர்ந்த , இளம் ஆளுமை ஏகாதிபத்திய கூலிப் படைகளால் சுட்டுக் கொள்ளப் பட்டது இன்னும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர் எதற்காக மரணத்தை நோக்கி நடந்தார்..? எந்தத் தேவை அவரை அவசர அவசரமாக சாவுக்குழிக்குள் தள்ளியது? …..
விடை தேடிப் பார்த்தால் நாம் யாருமே உணர்ச்சி வயப்படாமல் இருக்கமுடியாது…..

உலகம் முழுக்க உள்ள எளிய மக்கள் அனைத்து தளைகளில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றும் ,அதற்கு உலகளாவிய புரட்சி நிகழ வேண்டும் என அவர் விரும்பினார்.

அதன் காரணமாகவே ….

கியூபா நாட்டில் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
தனக்கு இருந்த புகழ்,செல்வாக்கு,குடும்பஉறவுகள்,செல்வம் ,அனைத்தையும் விட்டு விட்டு இரவோடு இரவாக பொலிவியா சென்றார்……அவர் புரட்சிக்காரனாக ஆனதில் சூழ்நிலைக்கு எந்த பங்கும் இல்லை. மாறாக சக மனிதர்களின் மீது அவர் வைத்த அளவற்ற பற்றே காரணமாக திகழ்ந்தது.

(தொடரும்……)

280 total views, no views today

218 total views, no views today

பள்ளிக்கூடம் —– திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………

தமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார். நம் கதையை, நம் மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகளை
அசல் மாறாமல் மண்ணின் மணத்தோடு தங்கர் திரைமொழியாக மாற்றி திரையில்
விவரிக்கும் போது நம் கண்கள் இயல்பாக கலங்கத்தான் செய்கின்றன…..தனது களவாடிய பொழுதுகளை நம் விழிகளில் நிகழ்த்துகிறார் தங்கர்..

திரைத்துறை முழுக்க இன்று பணம் செய்யும் தொழிலாக மாறிப்போய் விட்டது..
பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்ட அரங்குகளில் பெரிய நடிகர்-நடிகையரை ஆடவிட்டு ஒரு வரிகதையில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவதாக மாயங்கள் காட்டுகின்றன.நம் தமிழனுக்கும் அண்ணாந்து வேடிக்கை பார்த்து பார்த்தே கழுத்து வளைந்து விட்டது.இதனால் நிகழ்ந்தது என்ன என்பதை யோசிக்கும் போதே அடுத்த பிரம்மாண்டம் வந்து விடுகிறது….இதுப் போன்ற சங்கடங்கள் இல்லை தங்கர் பச்சானின் பள்ளிக்கூடத்தில்…

நம் பண்ருட்டி தமிழ் பேசும் எளிய மனிதர்கள் படம் முழுக்க காணப்படுகின்றனர்.
மல்லாக்கொட்டை பையோடு எண்ணெய் பூசிய முகத்தோடு அய்யோடி மாவட்ட
ஆட்சியர் வெற்றியை பார்க்க வரும் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கிறது..அதிரசம் கொண்டுவந்திருக்கியா?…..கேட்கும் நண்பனிடம் அவர் இல்லாம நான் வருவேனா என்று வெள்ளந்தியாய் பேசும் அய்யோடி நம்மை படம் முழுக்க கட்டிப் போட்டு விடுகிறார்…இலங்கை தமிழர்களை அக்கறையோடு விசாரித்து சேர்ந்து உணவு உண்ணும் காட்சி ஈழம் குறித்தான நம் மதிப்பீடுகளை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் நம்மிடையே உள்ள ஈழம் குறித்தான அக்கறையின்மை சார்ந்த கேள்விகளை முன் வைக்கிறது..

பள்ளிக்கூடம் படத்தை தமிழர்கள் அணுகுவதில் எவ்வித சங்கடங்களோ, உறுத்தலோ இல்லை.திரையரங்கில் படம் ஒடும் போது ஆங்காங்கே விசிம்பல்
ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன.. திரைப்பட இயக்குனர் முத்து-ஜெயந்த்தாக வரும் சீமான் பக்குவமான நடிப்பில் மனதைக் கவர்கிறார்.முத்து வீட்டில் பழைய
துணிகளை அய்யோடி ஆசையாய் எடுத்து வைத்து கொண்டு, எடுத்துட்டு போக
ஒரு பை இருந்தா குடுடா என்று கேட்கும் போது நாகரீகம் கருதி கட்டி வைத்திருக்கும் நம் மனது உடைந்து போய் கலங்கி விடுகிறது..

காட்சியமைப்பில் உணர்வுகளை மேலீட வைக்கிற சாதூர்யம் தங்கருக்கு நன்றாகவே கைவருகிறது.அதிக ஒப்பனை இல்லா நடிகர்கள் அதிகமாக பேசாமல்
உணர்வு தளத்தில் செயல் படுவது ஆறுதல் அளிக்கிறது. இடிந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக வரும் சிநேகா கண்களால் பேசி கவர்கிறார்.
நிராசை மிகுந்த ஏமாற்றத்தையும் ,காதல் குதூகலத்தையும் அவர் சிரமமின்றி
அழகாக கையாள்வது பாராட்டுதலுக்குரியது.அதேப் போல் ஸ்ரேயாவும்
சிறிய வேடம் என்றாலும் அசத்துகிறார்…

சீமான் மிகையில்லாத நடிப்போடு இயல்பாக வந்து அனைவரையும் கவர்கிறார்.
இனிமேல் சீமான் எவ்வித தயக்கமும் இன்றி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்ற அனுமதி சீட்டை இப்படம் அவருக்கு பெற்று தந்திருக்கிறது.

அனைவருக்கும் மேலாக தங்கர் பச்சான் இயல்பான தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.நேசம் மிக்க அவரது தமிழ் உணர்வு ஒவ்வொரு காட்சியமைப்பிலும்
வெளிபடுகிறது….எனக்கு கிழங்கு உரிக்க தெரியாதா…? என்று தன் மண் பாசத்தோடு கேட்கும் நரேன் உணர்வில் தன் சொந்த ஊரை விட்டு வந்த மனிதர்களின் நினைவில் எப்போதும் ஊறும் சுனைப்போல ஊறிக் கொண்டிருக்கும் ஊர்ப்பாசம் தெரிகிறது….

தமிழர்களுக்கான தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் இதுவென்று காட்சியமைப்புகளில் நன்கு புலப்படுத்தி விடுகிறார் தங்கர்.
முக்கியமாக பள்ளி விழாவின் போது அப்பள்ளியில் படித்த வயதானவர்கள்
தங்கள் நினைவுகளால் தங்கள் இளமைக் காலத்தை மீட்டெடுப்பது காட்சியமைப்புகளால் கவிதையாக்கப் பட்டிருக்கிறது….

இடிந்த பள்ளியை எழுப்ப உலகம் முழுவதிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் உதவ
துடிக்கும் போது நமக்கு தன் தேசத்தை எழுப்ப துடித்துக் கொண்டுருக்கும் உலகமெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நினைவுக்கு வருவது சிறப்பு…
அவரவர் கூடு அவரவருக்கு உயிர் என்ற கருவோடு கவிதையாய் பயணிக்கிறது படம் . இசை எந்த இடத்தில் மெளனமாக வேண்டும் என்று நன்கு புரிந்து
படத்திற்கு ஒத்திசைவாக செயல்படும் வகையில் பயன் படுத்தப்பட்டிருப்பது
சிறப்பு…மிகையில்லாத இயல்பான ஒளியில் ஒளிப்பதிவின் நேர்த்தி தெரிகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை இழிவு
செய்து, தமிழ்நாட்டில், தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டி கொழுப்பெடுத்து படம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை மாற்ற முயலும் விஷக்கிருமிகளின் ஊடக நச்சுகளுக்கு நடுவில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி , மேற்கண்ட ஆபாச குப்பைகளுக்கு மாற்றாக எம் தமிழர் படம் வெளிவந்து உள்ளது..

தென்றல் படத்தில் தமிழ் குடமுழுக்கை வலியுறுத்தி காட்சிகள் வைத்த தங்கர் இந்த
படத்தில் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்க நடக்கும் போராட்டத்தை காட்டுகிறார். சமூக உணர்வு உள்ள தங்கர் பச்சான்,சீமான் போன்றவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமரசம் ஆகாமல் கொள்கைவாதிகளாக இருப்பது பெருமை அளிக்கக் கூடிய நிகழ்வாகும்.

சிற்சில குறைகள் தெரிகின்றன.அவை என்னவென்று இந்நேரம் உணர்ந்திருக்கும் வல்லமைப் பெற்றவர் நேர்த்தியான நெறியாளர் தங்கர் பச்சான்…

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.சீமான்,தங்கர் பச்சான் போன்றவர்களின் படங்கள் நம் தமிழகத்தில் நன்கு பெரிய வெற்றியை பெற வேண்டும். இவர்கள் போன்ற கலைகள் மூலம் தமிழ் உணர்வையும்,எளிய வாழ்வையும் வலியுறுத்துகிற கலைஞர்கள் தோற்கவே கூடாது..

தமிழர்களின் படம் வெல்ல வேண்டும்……..

தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து
கொண்டிருக்கும் கலையுலப் போராளிகள் தங்கர் பச்சான் ,சீமான் ஆகியோருக்கு
எங்கள் வாழ்த்தும், அன்பும்……

229 total views, no views today