மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நான் ஆகாயம் போல் வாழ்பவன்..

கட்டுரைகள்.. /

  எவரிடமும் யாசகம் பெறுவதல்ல அறிவு. சிலர் நினைப்பது போல தந்திரத்திலோ..குறுக்கு வழியிலோ பெற்று விடுதல்ல தகுதி. உலகின் விழிகள் உறங்கும் போது மூடா இமைகளை கொண்டு புத்தகங்களுக்குள் தன்னைத் தொலைக்கிற பயிற்சி.. நீண்ட பயணங்கள்.. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய சிறு வயது முதல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி பார்த்து… படைப்பில் கரைகிற உளவியல்.. சிறு வயது முதல் உடன் பயணிக்கிற உடல் குறைபாடுகளை வைத்துக் கொண்டு வெல்ல துடிக்கிற உத்வேகம். உளராமல்,,தளராமல் வார்த்தைகளை விரயமாக்குகிற எவற்றிலிருந்தும் …

1,208 total views, no views today

டேனியலின் தாய் மடி…

கட்டுரைகள்.. /

    குழந்தைப் பருவம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட… பட்டாம்பூச்சிகளின் சிறகு சொருகப்பட்ட..தேனமுது நிரப்பப்பட்ட கனவுகளால் ஆனது என்று பொதுவிதி எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் வாழ்வின் நிலையாமையும், அபத்தமும், நிரம்பிய விசித்திரக் கோடுகள் கலைத்துப் போட்ட ஓவியமாய் பால்யத்தைக் கொண்ட குழந்தைகளும் நம்மிடையே இருக்கிறார்கள் நம்மில் யாரால் உணர முடிகிறது..? எதனாலும் ஆற்ற இயலா காய வடுக்களை இளம் வயதிலேயே விதி சமைத்த கோரத்தால் பெற்று விட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். பொங்கி வரும் புன்னகை தருணங்களிலும் கண்களில் ததும்பும் …

1,027 total views, no views today

ஒரு இரவில்…எல்லையற்ற விடியல்கள் —

கட்டுரைகள்.. /

  எப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித உணர்ச்சிகளை ஒரு இரவால் மூர்க்கம் கொள்ள வைக்கவும், அமைதிப்படுத்தி ஆற்ற வைக்க முடியும் என்பது யாரால் மறுக்க முடியும்.. மனித வாழ்வின் பாடுகளை மனித மனம் அசை போடுவதற்காக இரவு ஒரு நீண்ட அமைதி வெளியை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இரவில் தான்.. நியான் விளக்குகள் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் எனது மகிழுந்து அமைதியாக …

954 total views, no views today

தமிழ்த்தேசியம்- சில புரிதல்கள்.

கட்டுரைகள்.. /

  தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல். இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல். அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் . தமிழ்நாட்டை …

861 total views, no views today

அனிதா- சாத்தான் தேசத்தில் பிறந்த தேவ மலர்..

கட்டுரைகள்.. /

  அமைதியாய் நகர்ந்துக் கொண்டிருந்த எங்கள் மகிழுந்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலவியல் வெப்பமும், முந்திரிக்காடுகளும் எங்களுக்குள் ஏதோ பல செய்திகளை சொல்லி வந்தன. சுடு வெயிலில் வெளுப்பேறி இருந்த அந்த நிலவியல் தமிழ் நாட்டுக்கு சற்றே வித்தியாசமானது. முந்திரிக்காடுகள் இரு புறமும் அடர்ந்திருக்க தமிழக வரைபடத்தில் இருந்தே தனித்திருக்கிறது அந்த சிற்றூர். அந்த நிலத்தில் நிலவும் அந்த வெப்பத்தை வெயில் என்றெல்லாம் அர்த்தப்படுத்தி விட முடியாது. ஒரு அடர் மழை போல அந்நிலத்தில் …

1,024 total views, 1 views today

அன்பின் இழைகளினால் நெய்யப்பட்ட தஞ்சைப் பட்டு- அண்ணன் ஹீமாயூன்.

கட்டுரைகள்.. /

அவரை நான் முதன் முதலில் சந்தித்தப் போது வெக்கை நிறைந்த பாலையின் நடுவே நின்ற கள்ளிப் போல கடுகடுவென முள்ளாய் தெரிந்தார். அடுக்கடுக்காய் தெறித்து விழுந்த வார்த்தைகள், வேகமான நடை, உணர்ச்சிப் பிரவாகமான மொழி என எல்லாமே சற்றே தூக்கலாக தெரிந்ததால் நான் கொஞ்சம் அசெளகரியமாகதான் உணர்ந்தேன். மின்னல் தெறித்து விழுந்த ஒரு நொடியில் அவர் என்னைக் கவனித்து விட்டார். அய்யாவின் மகனா…என்ற கணத்தில் தம்பி என தாவி அணைத்தார். சட்டென அக்கைகளுக்குள் சிக்கிக்கொண்ட நான் அதன் …

751 total views, no views today

….யார்..யார்..

கட்டுரைகள்.. /

    வெம்மை பூக்கும் இப்பாலையில்.. தனிமை யார்.. அனலேறிய நினைவு யார்… துளித்துளியாய் வடியும் இந்த இரவில்.. இருள் யார்.. குளிர் யார்.. அலை அலையாய் தழுவி எழும் இக் கடலில் படகு யார்.. தத்தளிப்பு யார்.. நிலவொளி சிலையாய் உறைந்திருக்கும் இந்தக் குளத்தில் நீர் யார்.. மெளனம் யார்.. வானமே வழிந்து ஓடுவதாய் உணர வைக்கும் இந்த அருவியில் ஓசை யார்.. பாய்ச்சல் யார்.. மேகமாய் திரண்டு வந்து பொழியும் மழை மாலையில்.. தேநீர் …

1,463 total views, no views today

தங்க மீன்களும் அழகனும்..

கட்டுரைகள்.. /

நிலா முழுகி கிடந்த கடலில் நட்சத்திரங்கள் துள்ளிக்கொண்டு இருந்த அப்பொழுதில் தான்… என் ஒற்றைப்படகில் நான் தனித்திருந்தேன்.. மஞ்சள் வெளிச்சமும், இருண்மையும் மாறி மாறி பிரதிபலிக்கும் இரவு பேருந்தின் சன்னலோர முகத்தோடு நீ லயித்திருந்த பொழுதொன்று ஆகாய அந்தர வெளியில் மிதந்துக் கொண்டிருந்தது.. நிரம்பி ததும்பிய அலைகளின் நுனியில் நேற்றிரவு உன் விழிகளில் மின்னிய அதே சுடர்கள்.. காட்சி மயக்கத்தில் தடுமாறி ஆழ் கடலில் விழுந்த என் மேனி எங்கும்பூத்து மலர்ந்தன அல்லிகள்.. அப்படியே என் இரு …

1,494 total views, no views today

பயணம் என்கிற பெருவழி..

கட்டுரைகள்.. /

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’ – கோணங்கி (விகடன் 16-09-2009) என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் …

1,674 total views, 1 views today

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

கட்டுரைகள்.. /

      பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம். ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன …

2,064 total views, 1 views today