மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நிலா சாட்சி..

கவிதைகள் /

  விண்ணில் இருந்து இறங்கி.. பனி சுரக்கும் வனம் கடந்து… சாத்தப்பட்டு இருக்கும் சாளரத்தை மெல்ல திறந்து.. விழி மூடி இருக்கும் நினைவேடுகளில்… மெல்ல ஒளி பாய்ச்சி குளிர வைத்து செல்கிறது… மறக்க முடியாத அன்றைய இரவில்.. உன்னையும்.. என்னையும்.. ஒரு சேர தழுவி நாசூக்காய் நழுவி விட்டுப்போன நிலா. 57 total views, no views today

57 total views, no views today

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..

கவிதைகள் /

அந்த மங்கிய ஒளி அறையில்.. தலைக்குனிந்து அழுதுக்கொண்டிருந்த அவனது விழிகள் கனன்று.. தகித்த ஆன்மாவின் சொற்களை சொல்ல முடியாமல் சிவந்திருந்த வேளையில் தான்.. அவனை சந்தித்தேன். எதிலும் நிலைக் கொள்ளாமல் அலைக்கழிந்து சிவப்பேறிய அவன் விழிகளுக்குப் பின்னால் இருந்த காயம் புரையோடி இருந்ததை அவன் விழிகளை நேரிட்டு பார்க்கும் எவரும் அறியலாம். காயத்தின் தர்க்க, நியாயங்களை.. பற்றி சிந்திக்க ஏற்கனவே பல இரவுகளை தின்று பசியாறி இருந்தான்.. அவன் விரல் இடுக்கில் சாம்பல் தட்டாமல் நடுங்கிக்கொண்டிருந்த சிகரெட்டின் …

63 total views, no views today

மீண்டும் ..

கவிதைகள் /

  அமில மழைத்துளிகள் கொட்டி சிதறும் என் எண்ண முற்றத்தில்.. எப்படியாவது துளிர்த்திட துடிக்கிறது என் ரோஜா.. அமைதியான ஒரு உதிர சொரிதலுக்கு பின்.. அமிலத்தை மிஞ்சியும்.. முளைத்தே விடுகிறது மலர்.. அமிலம் முள்ளாய்.. ரோஜாவினடியில் தேங்கி இருப்பதை உணர்ந்தாலும்.. முள்ளை பொருட்படுத்தாது தீண்ட நீளுகின்ற என் கனவின் விரல்கள் தயாராகவே இருக்கின்றன.. இன்னொரு உதிர சொரிதலுக்கு.. 66 total views, no views today

66 total views, no views today

வாழ்வு- சபிக்கப்பட்ட வரம்.

கவிதைகள் /

  நுரை ததும்பும் அந்த ஒற்றைக் கோப்பையின் விளிம்பில்… ஆலகாலமாய் பூத்திருந்த நஞ்சைக் கண்டு சற்றே சிரித்துக் கொண்டது.. சாத்தான். இதோ வாழ்வெனும் அமிர்தம். காதலாகி கசிந்துருகி.. மேனி துயர் கண்டு மெலிந்து புண்பட.. ரணம் கண்டு வதை பட்டு சுகம் காண வாழ்ந்து விட்டுப் போ என்ற அலட்சியத் தொனியில் அறிவித்தவாறே.. பீடியை பற்ற வைத்து இழுத்தான் சாத்தான். புகைச் சுருள் மேல் எழ யாரோ ஒருவளின் கூந்தல் நினைவு எனக்கு வந்தது. … நட்சத்திரங்களில் …

55 total views, no views today

கோப்பைகளின் இரவு..

கவிதைகள் /

அந்த சிவப்பு மேசையில்.. இரவு என்ற பொல்லாத மிருகமும்.. நானும்.. தனித்திருந்தோம்.. நினைவுகளை கடித்துக் குதறிய செந்நிற பற்களோடு சிரித்த இரவோடு.. வாழ்வை ஒரு மதுவாக்கி குடிக்க நானும் தயாரானேன்.. இரவின் விரல் இடுக்கில் சிகரெட்டாய் புகைந்துக் கொண்டிருந்த என் ஆசைகளின் கங்கொன்றின் நுனியில் மின்னியது ஒரு நட்சத்திரம். கனவுகளும்.. நிராசைகளும்.. சம விகிதத்தில் கலக்கப்பட்டு கோப்பைகள் தயாராகின.. தத்துவச்சாரங்களும் மெளனமாக்கப்பட்ட சொற்களும்.. இரண்டு பீங்கான் தட்டுகளில் நிரம்பி இருந்ததை முரண்களே நமது இன்றைய side dish …

65 total views, no views today

வேண்டுவன..மயக்கம்.

கவிதைகள் /

    எனது இரவே… நீ துளித்துளியாக நகர்வது … யாரோ கழுத்தை பொறுமையாக அனுபவித்து அறுப்பது போல… ரண வேதனையாக இருக்கிறது.. என் விழிகளே.. சிவந்த உங்களது விழிப்பை மறந்து சற்றே பொசுங்கி எரிந்துப் போங்கள்.. அது கொஞ்சம் ஆறுதலானது. உயிர்த்திருந்து ரணம் கொள்ளும் மனமே… கொஞ்சம் மயங்கிப் போ.. உன் நிலை மறந்து கிறங்குவது மிக நலம். ஆழ கொதித்து துயர வியர்வையால்.. எரியும் உடலமே… நீ மரத்துப்போ. அது மரித்துப் போவதற்கு நிகராக …

55 total views, no views today

இறுதிவிருந்தின் அவசியம்

கவிதைகள் /

  அந்த சாலையின் முனையில் அவனை நீ சந்திக்கக் கூடும்.. நிலைக்காத பார்வைகளோடும்.. குழறிய சொற்களோடும்.. கலைந்த கவனத்தோடும்.. கசங்கிய ஆடையோடும்.. முணுமுணுப்புகளோடு திரியும் அவனை நீ நிராகரித்து கடக்கலாம். நேர்த்தியான உன் ஆடைக்கு.. மின்னுகிற உன் ஆபரணங்களுக்கு.. இன்பம் மிதக்கும் உனது பயணத்திற்கு.. உண்மையின் கண்களோடு காத்திருக்கும் அவன் ஒரு உறுத்தல் தான்.. உன் விழி அசைவுகள் அவன் மீது படாதவாறு லாவகமாக கடப்பதில் இருக்கட்டும் உன் கவனம்.. இன்று நீ அணிந்திருக்கிற புனைவுகளின் அடவு …

63 total views, no views today

நினைவின் தனிமை..

கவிதைகள் /

    இரவுப் பொழுதின் மலை அருவி போல … யாரையும் நனைக்காமல் போகிறது.. தனிமை இசைக்கும் என் நினைவு… 75 total views, no views today

75 total views, no views today

சொல்லில் மறைந்த செய்திகள் ..

கவிதைகள் /

    வெளிச்சப்புள்ளிகள் முளைக்காத காட்டில் கண்களிரண்டையும் பிடுங்கி யாருக்கும் தெரியாமல் புதைத்து விடு.. கால்கள் இரண்டையும் கட்டி. கைகள் இரண்டையும் வெட்டி.. ஒலி படா வண்ணம் செவிகளை அறுத்து புதை.. மறக்காமல் என் ஆணுறுப்பினை வெட்டி ஓநாய்களுக்கு மத்தியில் வீசியெறி.. ஆழமாக புதை.. இன்னும் தோண்டு.. தப்பித்தவறி முளைத்து விட கூடாது என்ற கவனம் உன் அறிவினை பதட்டத்திலேயே வைக்கட்டும்.. ஆழ புதைத்து.. உன் கால்களால் மண்ணை மிதித்து உறுதிச்செய்து கொள்.. ஆழ புதைத்து விட்டு …

808 total views, no views today

இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…

கவிதைகள் /

      தழும்பாக மிஞ்சுவதும் வலியாக எஞ்சுவதுமாக கனன்று எரியும் காயம் நீ… பயப்படாதே.. ஒரு போதும் என் காயங்கள் ஆறுவதில்லை.. நானும் ஆற்ற நினைப்பதில்லை.. உன்னால் நகராத ஆற்றின் சுழி மையத்தில் விசையற்றும் திசையற்றும் ஆழ்ந்திருக்கின்றேன்.. அந்த மோனநிலையில் நானாகவே உணர்ந்தது எதுவும் உன்னால் இல்லை எனவும்… அது என்னால் தான் எனவும்.. சொல்லப்போனால் நீ கூட நானாக வரைந்துக் கொண்ட கனவு ஓவியம் எனவும்… …………………. இதை பார்த்து உன்னால் மெலிதாக புன்னகைக்கூட …

822 total views, 1 views today