மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சீமானின் கைது – தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி.

அரசியல் /

இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஆட்சியாளர்களாகிய இவர்கள் குற்றவாளிகளை தேடும் அழகினையும். அவர்களினை பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். இந்திய நீதிமன்றங்களால் கொலை ,கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வு மிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். …

478 total views, no views today

வணக்கங்கள்.

கடித இலக்கியம் /

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு .. வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் …

1,157 total views, no views today

சொற்களின் தூரிகை..

என் கவிதைகள்.. /

முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகே பாசிகளோடு சிந்திக் கிடந்த பசுமையான சில சொற்களை பார்த்ததாக அப்பா சொன்னார். தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம் பதித்த மழலை ஒன்று மஞ்சள் சொல்லொன்றை மகிழ்வுடன் பரிசளித்துப் போனது. கடந்துப் போன காலமொன்றை இழுத்து வந்த நினைவு ஒன்று , பெருமூச்சோடு செம்பருத்தி பூவில் இருந்து உதிரும் சிவந்த சொல் ஒன்றை கையளித்துப் போனது. இடையறா முயக்கத்தின் வெளிச்சத்தில் காம கடும் புனல் தருணமொன்று ..கிறங்கிய சொல் ஒன்றில் …

617 total views, 2 views today

சீமான் – உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..

அரசியல் /

அண்ணன் சீமான் மீது மீண்டும் வழக்கொன்றினை பதிவு செய்து விட்டு தனிப்படைகள் பல வைத்துக் கொண்டு தேடுகின்றனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு ..நிர்வாணப்படுத்தப்பட்டு..மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம் கொண்ட அறம் ஊழலும்..துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு …

528 total views, 1 views today

நீதிமன்றத்தில் தமிழ் – தமிழ் தேசிய இன தன்னெழுச்சி கோரிக்கை .

கட்டுரைகள்.. /

நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்க கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முது மொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong – என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே …

479 total views, no views today

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்

கட்டுரைகள்.. /

நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும் என் மனைவிக்கு இன்று வரை தெரியாது முத்துக்குமார் என்றொருவன் மரித்துப்போனது. என்றாவது ஒருநாள் எனது நாட்குறிப்பிலுள்ள அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள் அப்போது சொல்லிக்கொள்ளலாம்… நம்மையெல்லாம் ஏமாற்றினானே ஒரு நித்யானந்தா அவனைப்போல நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான் இந்த முத்துக்குமாரென்று! – என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் – முத்துரூபா கடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக …

426 total views, no views today

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

கட்டுரைகள்.. /

நன்றி- பட உதவி- வினவு தளம் தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள் நாடெங்கும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பில் திராவிடன் என்ற இனமாக தமிழர்கள் தங்களை குறிக்க வேண்டும் என நாய் ஆளுங்கட்சியாக இருந்தால் கூட நா கூசமால் ஜால்ரா அடிக்கும் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களை வீரமணியும், அவரது தி.கவும் சமீப காலங்களில் பேசுவது இல்லை. ஆனால் தூக்கத்தில் இருந்து திடீரென எழுப்பப்பட்டவன் எச்சில் வடிய எகத்தாளம் …

458 total views, no views today

மலையாளப் பார்ப்பான் ஜெயராம் எதிர்ப்பும்.. சில முற்போக்கு முகமுடிகளும்…

கட்டுரைகள்.. /

இந்த கட்டுரை கீற்று.காம் இணையத் தளத்தில் அங்குலிமாலா என்பவர் எழுதிய “ஜெயராம் எதிர்ப்பும்,தமிழ் தாக்கரேகளும்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. நம் தமிழின தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறி துப்பிய மலையாளத்து பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலி மாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை …

647 total views, no views today

நடிகர் ஜெயராமைக்கைது செய்ய வேண்டும்.வன்முறையைத்தூண்டியது நானல்ல.ஜெயராம் தான்.நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை

அரசியல் /

தமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது இதுதொடர்பான வழக்கில் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று சீமான் மீது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன்மாதிரியாகத்திகழும் தமிழ்ப்பெண்களை இழிவு படுத்திப்பேசியிருக்கின்றார். இதுஒட்டு மொத்ததமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.இது தொடர்பாக நாம் …

375 total views, no views today

மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவர்கள் எங்கள் தாய்மார்கள்..

கட்டுரைகள்.. /

.சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..நாங்கள் கருப்பர்கள் தான்.வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து விட்டு…சுடும் வெயிலில்..உழைப்பேறிய உடலோடு..வியர்வைக் குளியலாடி…அன்றாட வாழ்க்கைக்கேஅல்லலுற்று…நிற்கிற நாங்கள் வெளுப்பாகவும்..சிறப்பாகவும் இருக்க இயலாது தான்.வந்தவனை எல்லாம் வாழ விட்டு…ஆள விட்டு..வீதியில் நிர்கதியாய் நிற்கிற நாங்கள் உங்களைப் போல …

477 total views, no views today