மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கடலோடு.. உரையாடு.

கட்டுரைகள்.. /

♥️ ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம்‌‌ என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை. எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள். எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு. …

76 total views, 1 views today

அன்பே சகலமும்..

கவிதைகள் /

இறுதியில்அனைத்திலும்இழந்து இருப்பதும்,பெற்றிருப்பதும்,ஒன்றே ஒன்று தான்.. அதைவிடசுகமானதும்கொடுமையானதும்வெவ்வேறில்லை. அதுதான்கோரப்படும்வரமாகவும்விதிக்கப்படும்சாபமாகவும்திகழ்கிறது. அதுவேதண்டனையாகவும்பிரார்த்தனையாகவும்இருக்கிறது. அதுவேவாழ்வின்அர்த்தமுமாகஅபத்தமுமாகவாய்க்கப்பட்டிருக்கிறது. அதுதான்சாத்தானின்விலக்கப்பட்ட கனி.அதுதான்தேவனின்கருணை மிகுந்தஉதிரம். இறுதியாகஅனைத்திலும்மிஞ்சியதும்எஞ்சியதுமாகஅதனது பாடலேகேட்கக் கிடைக்கிறது. ஆதி அந்தம்அதுதான். அன்பே சகலமும். ♥️ 342 total views, 3 views today

342 total views, 3 views today