மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஏழு புவனம்  வென்றவனின் பாடல்..

கவிதைகள் /

  தீர்மானித்து விட்டேன். உன்னை நான் கண்டு கொள்ளப் போவதில்லை. சொல்லப்போனால் நாம் இனி சந்திக்கக்கூட போவதில்லை. நான் உள்ளே நுழைகிறேன். நீ கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கிறாய். உன்னை ஏறெடுத்துக் கூட நான் பார்க்கவில்லை. நீ ஒரு ராஜ விழிகளுடன் ஒரு அலட்சிய பார்வை பார்க்கிறாய். எதனாலும் மாறாத உறைந்து போன என் விழிகளில் நேசத்தின் சாயல் படராது கவனம் கொள்கிறேன். நான் எந்த சலசலப்பிற்கும் அஞ்சப்போவதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு நொடி அசைவில் …

646 total views, no views today

நாம் தமிழர் -அவதூற்று சேற்றினால் அழிக்க முடியா இன நலனுக்கான எழில்மிகு காவியம்.

அரசியல் /

தமிழ்ச் சமூகத்தின் ஓர்மைக்கு எப்போதும் சாதி ஒரு மாபெரும் தடையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே தான் சாதி முரண்களை திராவிடம் கடுமையாக பாதுகாத்து தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதை இன அழிவு காலங்களில் நுட்பமாக கவனித்த தமிழின இளைஞர்கள் இனி சாதியை துறந்த தமிழர்களின் பெரும் திரள் அரசியலே தமிழ்த்தேசிய அரசியல் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு தான் நாம் தமிழர் என்கின்ற ஒரு மாபெரும் அமைப்பைத் தொடங்கினோம். ஆனால் கால ஓட்டத்தில் எங்களோடு …

407 total views, no views today

புத்தக நதியில் மிதக்கும் சருகு..

இலக்கியம் /

–++++++-++——–++++–+————-_- “ஒரு புத்தகம் என்பது உங்கள் உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் தனித்துவமான அற்புதம்.” –ஸ்டீபன் கிங் புத்தகங்கள் இல்லாத ஒரு உலகம் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை. உடன்பிறந்தார் யாருமில்லாத பிறப்பு, பிறப்பிலேயே வாய்த்துவிட்ட நோய் தந்த தனிமை, உறக்கமில்லா இரவுகள், பேச துணையற்ற மருத்துவமனை பொழுதுகள் என இயல்பு உலகத்திலிருந்து மாறுபட்ட இன்னொரு உலக வாழ்க்கை என்னுடையது. படுக்கையில் படுத்திருக்கும் என் விழிகள் நிலைகுத்தி கண்டு கொண்டிருக்கின்ற மின்விசிறியை பார்க்க சோரும் போதெல்லாம்.. அருகிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரியை …

606 total views, no views today

அவர்கள் வருகிறார்கள்..

அரசியல் /

கொளுத்தும் வெயில் மழை போல ஒரு திரவமாக ஊற்றிக் கொண்டிருக்கிறது. எங்கள் வாகனம் அப்போதுதான் அந்த ஊருக்குள் நுழைகிறது. என் முன்னால் தான் என் தம்பிகள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கையில் துண்டறிக்கைகளோடு கழுத்தில் பச்சை துண்டுகளோடு கடந்த சில நாட்களாகவே அவர்கள் அவ்வாறு அலைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நான் பேசத் தொடங்கினேன். எனது பக்கத்தில் எங்களது வேட்பாளர் சகோதரி சுபாஷினி அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசிக்கொண்டு மக்களிடம் …

518 total views, 1 views today

மதிப்பிற்குரிய சு.ப.உதயகுமார் அவர்களுக்கு..

அரசியல் /

    மதிப்பிற்குரிய ஐயா சுப உதயகுமார் அவர்களின் பதிவை பார்த்தேன். அது அவருடைய கருத்து என்ற வகையில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனாலும் எங்களை நோக்கிய குறிப்பிட்ட வகை முரண்களோடு நுட்ப விமர்சனங்களை முன்வைத்து இருப்பதால் பதில் சொல்ல வேண்டியதாகி விடுகிறது. முதலில் அவர் திமுக-காங்கிரசு கூட்டணி வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்பது அவருடைய விருப்பம். அவருடைய சொந்த விருப்பத்தை எங்கள் மீதான வன்ம விமர்சனங்களோடு நியாயப்படுத்த விரும்புவதில்தான் எங்களுக்கு சிக்கல். உதயகுமார் …

401 total views, no views today

எல்லா படிக்கட்டுகளும் ஏறுவதற்காக அல்ல..

அரசியல் /

அந்த உயரமான படிகளை பார்க்கும்போது ஏறிட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அருகிலிருந்த தம்பி செந்தில் நாதனிடம் எனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். எப்போதும் என்னை போன்ற நபர்களுக்கு படிக்கட்டுகள் மிகவும் ஆபத்தானவை. படிக்கட்டுகள் இல்லாத ஒரு உலகம் எங்கேனும் இருக்குமாயின் அங்கே போய் அமைதியாக வாழ்ந்து விட வேண்டும் என உள்ளுக்குள் ஆழ்ந்த ஆசை. என் திருமணத்தின் போது கூட திருமண மண்டபத்தில் இருந்த படிகட்டுகளில் முதல் நாளே சென்று ஏறி இறங்கி …

381 total views, no views today

மறதியால் அழிக்க இயலா நினைவின் தழும்பு .

அரசியல் /

  அண்ணன் சீமான் மீது பல முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் பல அறிஞர் பெருமக்களிடம் தோ   ன்றி இருக்கிற ஒவ்வாமை குறித்து பல இளம் தலைமுறையினருக்கு வியப்பு ஏற்பட்டிருக்கலாம். இதில் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகள் நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எதனால் சீமானை வெறுக்கிறோம் என்பதற்கான எந்தவிதமான நேர்மையான பதிலும் அவர்களிடத்தில் கிடையாது. நான் அறிந்த வரையில் இந்த பெரியாரிஸ்டுகள் மத்தியிலிருந்து ஒருவர் 2009 இன அழிவிற்கு பிறகு அடைந்த மற்றும் அடைகிற மக்கள் செல்வாக்கே இதற்கெல்லாம் காரணமாக …

347 total views, no views today

சூரியகாந்திகள் மலராத நிலம் .

கவிதைகள் /

– குழந்தைகளை வேட்டையாடும் சமூகம் ஓநாய்களுக்கு உரியவை. பால் நிலாவின் கதைப்பக்கங்களில் நகரும் பிஞ்சு விரல்களில் உறைந்திருக்கும் உதிரத்துளிகளை நீண்டு சுழலும் நாவினால் எட்டி சுவைக்கின்றன ஓநாய்கள்.. தனித்திருக்கும் குழந்தைகளின் மீது சாத்தானின் நிழல் கவிய தொடங்கும் தருணங்கள் இப்பொதெல்லாம் எல்லா நொடிகளிலும் நிகழ தொடங்குவதைதான் உறக்கத்தில் கூட இறுகப் பற்றிக் கொள்ளும் பிஞ்சுவிரல்களின் நடுக்கங்கள் அறிவிக்கின்றன. இறுக்கி கட்டப் பட்டிருக்கும் வெள்ளைத்துணியினை அவிழ்த்துப் பார்த்தால் இறுகி இருக்கும் விரல்களுக்கு நடுவில் கசங்கிய பூ ஒன்று. இவ்வாறாக …

673 total views, 1 views today

யாருக்கு உங்கள் ஓட்டு..?

அரசியல் /

நேற்றைய தினம் தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு கலந்தாய்வு நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாங்கள் அனைவரும் எங்கள் கருத்துக்கள் அனைத்தையும் சொல்லி முடித்த பிறகு இறுதியாக பேச வந்தார் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பெரு மதிப்பிற்குரிய ஐயா கிருஷ்ணகுமார் அவர்கள். அய்யா கிருஷ்ணகுமார் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளர். தமிழ் பெரும்புலவர் அம்மாபேட்டை தமிழ் சேரனார் அவர்களது இளைய மைந்தர். …

371 total views, no views today