மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஏனெனில் அவர் ..

அரசியல் /

——————————– அது ஒரு வெறும் உரையாடல். தன் கட்சியை சேர்ந்தவரிடம் அவர் பேசுகிறார். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பேசிக்கொள்கிறார்கள். தலைமைக்கு கட்டுப்பட கோருவதும், கண்டிப்பதும் அரசியல் அமைப்புகளில் மிக இயல்பாக நடைபெறுகிற ஒன்று. அதை ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டு ஏதோ எதிர்மறைச் செய்தி போல பரப்பவதிலிருந்து.. அவர் குறித்து தவறான பிம்பத்தினை பரப்ப வேண்டும் என்கிற தவிப்பு பலருக்கும் இருப்பது புரிகிறது. பல தவறானவைகளுக்கு அவர் பெரும் ஆபத்தாக திகழ்கிறார் என்பதும் புரிகிறது. ஏன் …

321 total views, no views today

துளி-23

கட்டுரைகள்.. /

  பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது. பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் …

583 total views, no views today

பேரன்பின் அற்புதன் -பயஸ் அண்ணா

அரசியல் /

_—–+-++++++++++++++++++++++++++++ “இரவு ஒரு பசித்த ஓநாய். நாடோடி போகுமிடமெல்லாம் அது அவனை தொடர்கிறது. பிசாசுகளுக்காக எல்லைகளைத் திறந்து விடுகிறது. வில்லோ மரக்காடு இன்னும் காற்றைத் தழுவுகிறது இருமுறை சாவதற்கு நாம் என்ன குற்றம் செய்தோம்? வாழ்க்கையில் ஒருமுறை செய்தோம். சாவில் மறுமுறை செத்தோம்.” மஹ்மூத் தர்வீஷ் தமிழில் எம்.ஏ.நுஃமான். +———- நீண்ட நேரமாக அந்த கதவுகளுக்கு முன்னால் நான் காத்திருக்கிறேன். வெளியே பரபரப்பான ஒரு உலகம். யாருக்கும் எதைப்பற்றியும் பேசிக் கொள்ளவோ பகிர்ந்து கொள்ளவோ எதுவும் இல்லை. …

441 total views, no views today

செவ்விந்தியனின் நடனம்- நூல் வாசிப்பு அனுபவ குறிப்புகள் சில.

இலக்கியம் /

அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை, ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன். ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்: மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல். அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று …

523 total views, 2 views today

மீரா-பாக்கியராசனின் மணநாள் வாழ்த்து 27-01-2019

சுயம் /

எப்போதும் தன்னை சூழ வரும் வன்ம வெறுப்பின் கழுகுகளை சட்டென பறந்து பின்மாயும் சிறு ஈசல்களாக மாற்றி ரசிக்கும் ஒரு விசித்திரக்காரனின் காதற் கதை இது. ————————–—– எவராலும் வெல்ல முடியாத அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது. சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது. அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் …

438 total views, no views today

அக்காளின் எலும்புகள்.. -யாவருக்குமான கள் பிரதி.

இலக்கியம் /

  எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் …

1,179 total views, 1 views today

செவ்விந்தியனின் நடனம் -புத்தக வெளியீட்டு விழா- 12-01-2019

இலக்கியம் /

        நான் எழுதி களம் வெளியிட்டிருக்கிற “செவ்விந்தியனின் நடனம்” என்கின்ற நினைவோடை கட்டுரைத் தொகுதியினை எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட.. களம் பதிப்பகத்தின் சார்பாக எனது மைத்துனர் பாக்கியராசன் சே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எழுத்துலகில் எனக்கு ஆசானாக இருக்கிற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எனது நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது எனது வாழ்நாள் பெருமை. விடுதலைக்கு விலங்கு, சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் என்கின்ற எனது …

586 total views, no views today